என்னைப் பற்றி

நான் கந்தர் வைத்திலிங்கம் திரவியம் தம்பதிகளின் மூத்த மகன். ஆரம்பக் கல்வியை கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலத்திலும், உயர் தரக் கல்வியை கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியிலும், பட்டப்படிப்பினை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்று ஆசிரியராக இரத்தினபுரியிலுள்ள நீலகாமம் தமிழ் வித்தியாலத்தில் நியமனம் பெற்றேன். அதிபர் பரீட்சையில் சித்தியடைந்து கோப்பாய் நாவலர் தமிழ்வித்தியாலத்தில் நியமனம் பெற்றேன். எனது காலத்தில் நாவலர் தமிழ் வித்தியாலம் கல்வியிலும் இணைப்பாடவிதானத்திலும் யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைகளோடு போட்டியிட்டு முதன்மை நிலையை அடைந்தது. அதன் பின் நல்லூர் கோட்டக் கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்றேன். அதன் பின் நல்லூர்க் கல்விக் கோட்டம் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றது.
நான் எழுதிய நூல்கள், அவிழாத முடிச்சுக்கள், ஆத்திசூடிக் கதைகள் 108, திருக்குறள் கதைகள் 1330, திருவருட்பயன் கதைகள் 100, மாயை பற்றிய தத்துவக் கதைகள் 50, இன்பத்தை அள்ளித் தரும் இந்து மதம் 10 தொகுதி, பிரமமாய் நின்ற சோதி, அன்பான வேண்டுகோள், வாழ்க்கை என்பது, சிறுவர் கதைத் தொகுதி 2, கனவுகள் கற்பனைகள். பகவத் கீதைக் கதைகள் 700, புத்திமான் பயில்வான், அட்டமி நிலவு, குதிரைக்காரன் மகன், திருக்குறள் உரைகதை(நாவல்) வடிவில், ஆசாரக் கோவைக் கதைகள் 100, பழமொழிக் கதைகள் 400, சிவஞானபோதம் உரை விளக்கம், திருமந்திரக் கதைகள் 3000, நாலடியார் கதைகள் 400, நான்மணிக்கடிகைக் கதைகள் 103, இன்னாநாற்பதுக் கதைகள் 40, இனியவை நாற்பதுக் கதைகள் 40, எலாதிக்கதைகள் 82, சிறுபஞ்ப மூலக்கதைகள் 92, திருகடிகக் கதைகள் 100, முதுமொழிக் காஞ்சிக் கதைகள் 100, கண்ணன் அருளிய கீதைச் சுலோகங்களுக்கான இலகுவான உரை, போர்க்களம், மனதில் உலவும் நிலவு, கண்களுக்குச் சொந்தமில்லை, கற்தூண்கள், வானொலி நாடகம் 100.
நான் எழுதிய நாவல்கள் வீரகேசரி, மித்திரன், சங்கு நாதம், தென்றல், தினமுரசு போன்ற பத்திரிகையில் வெளிவந்தன. வெளி வராது இன்னும் 20 நாவல்கள் உள்ளன. அட்டைப் படங்களை வடிவமைத்துத் தந்த செல்வி ப.யாழினி அவர்கட்கும் நன்றி.

என்னைப்பற்றி மேலும் 1

என்னைப்பற்றி மேலும் 2

என்னைப்பற்றி மேலும் 3

என்னைப்பற்றி மேலும் 4